Connect with us

வசூல் வேட்டையாடும் தலைவரின் வேட்டையன் திரைப்படம் – வசூல் விவரத்தை வெளியிட்ட படக்குழு..!!

Cinema News

வசூல் வேட்டையாடும் தலைவரின் வேட்டையன் திரைப்படம் – வசூல் விவரத்தை வெளியிட்ட படக்குழு..!!

திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வரும் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த 10 ஆம் தேதி வெளியான திரைப்படமே வேட்டையன் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லைக்கா நிறுவனத்தின் அசத்தலான தயாரிப்பில் வெளியான இப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் தற்போது இப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி வேட்டையன் திரைப்படம் உலக அளவில் 5 நாட்களில் ரூ 240 கோடிக்கு வசூல் செய்துள்ளதாக சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னையை துவைத்தெடுக்கும் கனமழை - சூப்பர்ஸ்டார் வீட்டில் ஏற்பட்ட பாதிப்பு..!!

More in Cinema News

To Top