Connect with us

‘கங்குவா’ இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

Cinema News

‘கங்குவா’ இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

சூர்யாவின் அசுரதனமான நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள “கங்குவா” படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனராக தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிப்பில் மிரட்டலாக உருவாகி உள்ள திரைப்படமே கங்குவா.

வரலாற்று கதைக்களம் கொண்ட இப்படத்தில் கதையின் நாயகனாக சூர்யா நடிக்க அவருடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னட,உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி உலககெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கங்குவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 26ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சார் படத்தின் புதிய ட்ரைலர் வெளியானது..!!

More in Cinema News

To Top