Connect with us

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் – CCTV காட்சியால் மரண பீதியில் மக்கள்..!!

Featured

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் – CCTV காட்சியால் மரண பீதியில் மக்கள்..!!

மயிலாடுதுறை செம்மண் குளம் பகுதியில் சிறுத்தை அச்சம் எதிரொலியாக 7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை பகுதியில் உள்ள சாலையில் சிறுத்தை சுற்றித்திரிந்த சிசிடிவி வீடியோ வெளியான நிலையில் சிறுத்தையால் தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திடுமோ என்ற பயத்தில் இரவில் வெளியில் நடமாடுவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுக்காப்பாக இருக்கும் படி காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் . சிறுத்தை குறித்து தகவல் தெரிந்தால் 9626709017 என்ற எண்ணை உடனே தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இந்நிலையில் சிறுத்தை நடமாடும் மயிலாடுதுறை செம்மண் குளம் பகுதியில் 7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என்றும் வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஓடிடியில் வெளியானது விஜய் ஆண்டனியின் ஹிட்லர் படம்..!!

More in Featured

To Top