Connect with us

மக்களவைத் தேர்தல் 2024 : அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீடு கையெழுத்தானது..!!

Featured

மக்களவைத் தேர்தல் 2024 : அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீடு கையெழுத்தானது..!!

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது .

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு ,மனு தாக்கல் செய்யும் பணி இன்று துவங்கி உள்ளது .

இதனை முன்னிட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றன .

அந்த வகையில், திமுக , அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே இன்று தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாக கூறப்பட்ட நிலையில் சொன்னது சொன்னபடி இரு கட்சிகளுமே தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது .

சென்னை ராயப்பேட்டியில் உள்ள அதிமுக கட்சி தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.

இதையடுத்து அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது . இந்த கூட்டணியில் தேமுதிக-விற்கு மத்திய சென்னை, திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது :

2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடரும் . அதிமுகவுடன் கூட்டணி என்பது ஒரு ராசியான கூட்டணி எண்ணிக்கை என்பது முக்கியமில்லை; யார் யார் கூட்டணியில் சேர்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தோனியுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை - முன்னாள் கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெய்ன் உருக்கம்..!!

More in Featured

To Top