Connect with us

மக்களவை தேர்தல் 2024 : பெண்களுக்கான PINK வாக்குச்சாவடி மையம் திறப்பு..!!

Featured

மக்களவை தேர்தல் 2024 : பெண்களுக்கான PINK வாக்குச்சாவடி மையம் திறப்பு..!!

மக்களவை தேர்தல் நாளை நடைபெற உள்ள பெண்களுக்கான PINK வாக்குச்சாவடி மையம் திறக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கென PINK வாக்குச்சாவடி மையம் திறக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சென்னையில் 16 இடங்களில் பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்தளம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இங்கு பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களே.

கோடை வெயிலில், பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க சிரமப்படுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தாலும், இங்கு அனைவரும் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இது எளிதான விஷயமல்ல - 'அமரன்' படக்குழுவுக்கு இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பாராட்டு..!!

More in Featured

To Top