Connect with us

“LCUவில் மேலும் பல நடிகர்களை இணைக்கவிருக்கும் லோகேஷ்!”

Cinema News

“LCUவில் மேலும் பல நடிகர்களை இணைக்கவிருக்கும் லோகேஷ்!”

முதல் படமான மாநகரம் படத்திலேயே அனைவரையும் தன்னை நோக்கி பார்வையை செலுத்த வைத்தார். முதல் படத்திலேயே அடுத்தடுத்து தான் சிறப்பான நடிகர்களை இயக்கும் வல்லமை படைத்தவன் என்பதையும் நிரூபித்தார். மாநகரம் படத்தை தொடர்ந்து கார்த்தியை வித்தியாசமான ஜானரில் கைதி படத்தில் நடிக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ். சாக்லேட் மற்றும் அதிரடி நாயகனாக நடித்துவந்த கார்த்தியை சிறையிலிருந்து தண்டனை முடிந்து வெளியே வரும் கைதியாக காட்டும் தைரியம் இருந்தது லோகேஷுக்கு…

இந்தப் படம் யாரும் எதிர்பார்க்காதவகையில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தின் அதிரிபுதிரி வெற்றி நேரடியாக விஜய்யிடம் லோகேஷை கொண்டு சேர்த்தது. கோலிவுட்டில் பல இயக்குநர்கள் முப்பது ஆண்டுகளாக விஜய்யை இயக்க தவமிருக்க தன்னுடைய மூன்றாவது படத்திலேயே அந்த வாய்ப்பை பெற்றார் லோகேஷ். மாஸ்டர் என்ற இந்தப் படத்தில் சுத்தமான பழக்கங்கள் கொண்ட வில்லனையும், குடிபோதையுடன் திரியும் விஜய்யையும் துணிச்சலுடன் கேரக்டர்களாக்கினார்.

இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்ததாக கமலை வைத்து இயக்கிய விக்ரம் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் கமலை தாத்தாவாக்கி அழகு பார்த்தார். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தை இன்டஸ்ட்ரியல் ஹிட்டாக்கினார். இந்தப் படத்தில் இவர் கொடுத்த LCU இணைப்புகள் படத்திற்கு அதிகமான கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது. இந்த LCU தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாக ரசிகர்கள் அதிகமாக யோசிக்க வைத்தது.

இது இப்படியா, அது அப்படியா என்று ரசிகர்கள் கூட்டம் போட்டு லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் குறித்து யோசித்து தள்ளினர். இந்நிலையில் தற்போது லியோ படத்திலும் இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு முன்பு, அந்த அளவிற்கு இந்தப்படத்தில் அதன் வரவேற்பு இருக்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய யூனிவர்சில் அடுத்தடுத்த நடிகர்களை லோகேஷ் இணைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது தன்னுடைய LCU குறித்து குறும்படமும் எடுத்துள்ளார் லோகேஷ். இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய LCUவில் சியான் விக்ரம், விஷால், ராகவா லாரன்ஸ், பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் ராம்சரண் போன்றவர்களையும் லோகேஷ் இணைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களை லோகேஷ் எப்படி தன்னுடைய யூனிவர்சில் இணைப்பார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்திவரும் நிலையில், அவரது அடுத்தடுத்த படங்களில் இதற்கான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே லோகேஷ் யூனிவர்சில், கார்த்தி, சூர்யா, கமல்ஹாசன், விஜய் ஆகியோர் உள்ள நிலையில் அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களையும் இணைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். லோகேஷ் மொத்தமாகவே 10 படங்கள் மட்டுமே இயக்குவேன் என்று முன்னதாக ஒரு பேட்டியில தெரிவித்துள்ளார். இதுவரை 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ், அடுத்ததாக தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ள குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ரோலக்ஸ் கேரக்டரின் படம், இரும்புக்கை மாயாவி உள்ளிட்ட படங்களையும் லோகேஷ் இயக்கவுள்ளார்.

See also  நல்ல நடிப்புடன் கூடிய ஜாலியான படம் - ‘லப்பர் பந்து’ படக்குழுவுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top