Connect with us

ப்ளாக் பஸ்டர் படமாக உருவெடுத்த லப்பர் பந்து – இதுவரை செய்த வசூல் விவரம் இதோ..!!

Cinema News

ப்ளாக் பஸ்டர் படமாக உருவெடுத்த லப்பர் பந்து – இதுவரை செய்த வசூல் விவரம் இதோ..!!

தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் இதுவரை செய்தியல்ல வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படமே ‘லப்பர் பந்து’ .

ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது,

வெளியான நாள் முதல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் முதல் படத்திலேயே தமிழரசன் ரசிகர்களின் மனதில் பட்டா போட்டு உட்க்காந்து விட்டார்.

படத்தின் வசூலோ மளமளவென உயர்ந்து வரும் நிலையில் தற்போது இப்படம் வெளியாகி 18 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் கிசுகிசுகின்றனர். இதுமட்டுமின்றி இனி வரும் நாடுகளிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வங்கதேசத்திற்கு எதிரான 3வது டி20 போட்டி - டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!!

More in Cinema News

To Top