Connect with us

‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க தருணங்கள் நிறைய உள்ளது – நடிகர் கார்த்தி பாராட்டு..!!

Cinema News

‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க தருணங்கள் நிறைய உள்ளது – நடிகர் கார்த்தி பாராட்டு..!!

ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ் காம்போவில் உருவாகி திரையரங்குகளில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் தற்போது நடிகர் கார்த்தி இப்படத்தையும் படைக்கலவையும் வெகுவாக பாராட்டி உள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படமே ‘லப்பர் பந்து’ .

ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் TSK , பாலசரவணன் தேவதர்ஷினி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் நடித்துள்ளனர்.

மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுமட்டுமின்றி இப்படத்தை கிரிக்கெட் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் . இந்நிலையில் தற்போது இப்படத்தையும் படக்குழுவையும் நடிகர் கார்த்தி வெகுவாகி பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தேவி திரையரங்கில் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தை பார்த்தேன். சிறப்பான Entertaining திரைப்படம். அட்டகாசமான நடிப்பு மற்றும் வசனங்களுடன் நிறைய குறிப்பிடத்தக்க தருணங்கள் இருந்தன. படக்குழுவுக்கு என் வாழ்த்துகள் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2025 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமனம்..!!

More in Cinema News

To Top