Connect with us

‘லப்பர் பந்து’ படத்தின் அசத்தலான டிரைலர் வெளியானது..!!

Cinema News

‘லப்பர் பந்து’ படத்தின் அசத்தலான டிரைலர் வெளியானது..!!

ஹரிஷ் கல்யாண் – அட்டகத்தி தினேஷ் காம்போவில் உருவாகி உள்ள `லப்பர் பந்து’ படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல இளம் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அதில் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் தான் லப்பர் பந்து.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடிக்க அவருடன் சேர்ந்து அட்டகத்தி தினேஷ்,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தின் ட்ரைலருக்காக அனைவரும் காத்திருந்தக நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை சென்சேஷனல் இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.

இதோ ‘லப்பர் பந்து’ படத்தின் அசத்தலான டிரைலர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தேதி குறிச்சாச்சு மக்களே - சென்னையில் நடைபெறுகிறது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா..!!

More in Cinema News

To Top