Connect with us

‘கங்குவா’ திரைப்படம் குறித்து செம ஓப்பனாக பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி – என்ன சொன்னார் தெரியுமா..?

Cinema News

‘கங்குவா’ திரைப்படம் குறித்து செம ஓப்பனாக பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி – என்ன சொன்னார் தெரியுமா..?

‘கங்குவா’ திரைப்படம் குறித்து பாடலாசிரியர் மதன் கார்க்கி நெகிழ்ச்சியுடன் போட்டுள்ள பதிவு தற்போது செம வைரலாக வலம் வருகிறது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படமே கங்குவா . UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படம் வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி உலககெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படம் குறித்து பாடலாசிரியர் மதன் கார்க்கி நெகிழ்ச்சியுடன் போட்டுள்ள பதிவு தற்போது வைரலாக வலம் வருகிறது.

கங்குவா திரைப்படத்தை இன்று பார்த்தேன். டப்பிங் பணிகளின்போது ஒவ்வொரு காட்சியையும் 100 முறைக்கும் மேல் பார்த்திருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதன் தாக்கம் அதிகரிக்கிறது.

பிரமாண்டமான காட்சிகள், கதையின் ஆழம், இசை ஆகியவையுடன் இணைந்து சூர்யாவின் நடிப்பு ஒரு அழகிய கலையை உருவாக்கியுள்ளது. இந்த அனுபவத்தைக் கொடுத்த இயக்குநர் சிவாவுக்கு நன்றி என மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் த்ரிஷா - வைரல் போட்டோஸ்..!!

More in Cinema News

To Top