Connect with us

மகேஷ்பாபுவின் ‘குண்டூர் காரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Cinema News

மகேஷ்பாபுவின் ‘குண்டூர் காரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி திரையரங்குளில் சக்கை போடு போட்டு வந்த குண்டூர் காரம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபுவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் குண்டூர் காரம் .

த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் சேர்ந்து ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமனின் அற்புதமான மெட்டுகளில் உருவான இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியானது.

என்னதான் இந்த படத்தில் மகேஷ் பாபு நடிப்பில் மிரட்டி இருந்தாலும் படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு இப்படம் பெரிதாக ஓடவில்லை என ஒரு பக்கம் கூறப்படுகிறது.

அப்படியே மறுபக்கம் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் தூள் கிளப்பியதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் திரையரங்குளில் இப்படத்தை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் இனி OTT தளத்தில் பார்க்க போகிறார்கள் . அட ஆமாம் மக்களே இப்படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .

அதுமட்டுமின்றி இப்படம் படத்தை தெலுங்கு தவிர, மலையாளம், தமிழ், இந்தி, கன்னட மொழிகளிலும் ரசிகர்கள் காண முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்தடுத்து எழுந்த குற்றச்சாட்டுகள் - உறுதுணையாக நின்ற நடிகர் சங்கத்திற்கு உருக்கமாக நன்றி சொன்ன நடிகர் தனுஷ்..!!

More in Cinema News

To Top