Connect with us

“நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு! அபராதம் செலுத்தாத மன்சூர் அலிகான்! நீதிபதியின் அதிரடி உத்தரவு!”

Cinema News

“நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு! அபராதம் செலுத்தாத மன்சூர் அலிகான்! நீதிபதியின் அதிரடி உத்தரவு!”

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நீதிமன்றம் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த நிலையில் அந்த அபராதத்தை அவர் செலுத்தாத நிலையில் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மன்சூர் அலிகான் பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனை அடுத்து அவர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் காவல்துறையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த மன்சூர் அலிகான், த்ரிஷாவிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் திடீரென த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தவறு என்றும் இதற்கு மான நஷ்ட வழக்கு தொடர முடியாது என்று கூறிய நீதிபதி, மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்.

இந்நிலையில் தனக்கு நிதி நெருக்கடியாக இருப்பதால் ஒரு லட்ச ரூபாயை உடனே புரட்ட முடியவில்லை என்றும் எனவே 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் நீதிபதியிடம் சமீபத்தில் மன்சூர் அலிகான் கேட்டிருந்தார். அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் திடீர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ’அபராதம் கட்டுவதாக தனி நீதிபதியிடம் ஒப்புக்கொண்டு, கால அவகாசமும் பெற்று விட்டு, பின்னர் இங்கு வந்து தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய மனு தாக்கல் செய்ய முடியாது என்று கூறினார். வேண்டும் என்றால் தனி நீதிபதியிடம் சென்று உத்தரவை திரும்ப பெற கோரிக்கை விடலாம் என்றும் அல்லது பணம் கட்ட முடியுமா? முடியாதா? என்பதை அவரிடம் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இரு பெரும் OTT தளங்களில் நகுலின் வாஸ்கோடகாமா திரைப்படம்..!!

More in Cinema News

To Top