Connect with us

OTTயில் வெளியானது மாரி செல்வராஜின் வாழை திரைப்படம்..!!

Cinema News

OTTயில் வெளியானது மாரி செல்வராஜின் வாழை திரைப்படம்..!!

மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வந்த நிலையில் இன்று ஓ.டி.டியில் கலக்கலாக வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் உணர்ச்சிகர இயக்குநர்கள் பட்டியலில் ஒருவராக வலம் வரும் மாரி செல்வராஜின் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் திரைப்படமே வாழை .

தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவான கடந்த 23 ஆம் தேதி வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் தூள் கிளப்பியது .

இந்நிலையில் இப்படம் எப்போது ஓ.டி.டியில் வெளியாகும் என அனைவரும் காத்திருந்த நேரத்தில் இன்று இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓ.டி.டி.தளத்தில் கலக்கலாக வெளியாகி உள்ளது.

தமிழ் ,இந்தி, தெலுங்கு, மலையாளம் என 7 மொழிகளில் வாழை படம் வெளியாகி உள்ளதாகவும் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வங்கதேசத்திற்கு எதிரான 3வது டி20 போட்டி - டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!!

More in Cinema News

To Top