Connect with us

மாரி செல்வராஜின் வாழை திரைப்பட ட்ரைலர் வெளியானது..!!

Cinema News

மாரி செல்வராஜின் வாழை திரைப்பட ட்ரைலர் வெளியானது..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள வாழை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் மாமன்னன் . பட்டிதொட்டி எங்கும் தூள் கிளப்பிய இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அசுர தனமான வெற்றியை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

இதையடுத்து இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே வாழை . சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ அந்த வாழை படத்தின் அசத்தலான ட்ரைலர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மெட்ரோவுக்கு மத்திய அரசு கொடுத்த ரூ.21,000 கோடியில் ரூ.15,120 கோடி என்ன ஆனது?- ஹெச்.ராஜா

More in Cinema News

To Top