Connect with us

கோவையில் நடைபெறும் மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

கோவையில் நடைபெறும் மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த முக்கிய தகவலை படைக்கல வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல ஸ்டார் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி . இவரது கைவசம் தற்போது சர்தார் 2 , வா வாத்தியாரே உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது மெய்யழகன் என்ற படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.

பிரேம் குமார் இயக்கத்தில் அசத்தலாக உருவாகி உள்ள இப்படத்தில் கார்த்தியுடன் கைகோர்த்து அரவிந்த் சாமி , ஸ்ரீவித்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் எதுவும் சமீப காலமாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ’மெய்யழகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த டக்கர் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஆகஸ்ட் 31ம் தேதி கோவை கொடிசியா ஹாலில் நடைபெறவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'அமரன்' படத்திற்கான டப்பிங் பணியில் நடிகர் சிவகார்த்திகேயன் - ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட படக்குழு..!!

More in Cinema News

To Top