Connect with us

எப்பப்பா பேட்டிங்கில் பட்டயகிளப்பிய மும்பை – டெல்லி அணிக்கு 235 ரன்கள் இலக்கு..!!!

Featured

எப்பப்பா பேட்டிங்கில் பட்டயகிளப்பிய மும்பை – டெல்லி அணிக்கு 235 ரன்கள் இலக்கு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 235 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் முதல் போட்டியில் MI – DC அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது

இந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம் போல் இஷான் கிஷன் மற்றும் ரோஹித் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதல் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்ய ஆரம்பமே அணியின் ஸ்கோர் எங்கேயோ சென்றது.

இதையடுத்து இருவரும் அரைசதம் கடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷான் கிஷன் 42 ரன்னிலும் ரோஹித் 49 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் நடப்பு தொடரில் முதல் முறை களமிறங்கிய சூரியகுமார் வந்த வேகத்தில் நடையைக்கட்டினார்.

ஓரளவு நிதானமாக ஆடிய கேப்டன் ஹர்டிக் பாண்டியா 39 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் வந்த டேவிட் மற்றும் ஷெப்பர்ட் அதிரடியில் மிரட்ட மும்பை அணியின் ஸ்கோர் எங்கேயோ சென்றுவிட்டது.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 234 ரன்களை சேர்த்து. இதையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஓடிடியில் வெளியானது விஜய் ஆண்டனியின் ஹிட்லர் படம்..!!

More in Featured

To Top