Connect with us

நாங்குநேரி சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் +2 தேர்வில் சாதனை – உயர்கல்விக்கு உதவுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

Featured

நாங்குநேரி சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் +2 தேர்வில் சாதனை – உயர்கல்விக்கு உதவுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை +2 தேர்வில் சாதனை படைத்துள்ள நிலையில் அவரின் உயர்கல்விக்கு உதவுவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் கடந்த ஆண்டு பள்ளி மாணவர் மீது, சக மாணவர்கள் வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அந்த மாணவனும் அவரது தங்கையும் பலத்த காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். சாதி ரீதியாலான இந்த தாக்குதல் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மேலும் இந்த சம்பவத்திற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்களும் வலுத்தது.

இந்நிலையில் , நாங்குநேரியில் சாதிய வன்கொடுமை தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை +2 தேர்வில் 469 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

தடைகளை தகர்த்தெரிந்து நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ள சின்னதுரைக்கு அனைவரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சின்னத்துரையின் உயர்கல்விக்கு உதவுவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன்.

“கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் ” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரபல கால் பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து க்ளப்-ன் மேலாளர் திடீர் நீக்கம்..!!

More in Featured

To Top