Connect with us

நல்ல பெயரெடுத்த வாழை திரைப்படம் – இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதி..!!

Cinema News

நல்ல பெயரெடுத்த வாழை திரைப்படம் – இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதி..!!

மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை பார்த்த தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

வாழை படம் பார்த்தபின் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து பாராட்டியுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது #வாழை!

‘திரைப்படத்தின் வெற்றி’ என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் ‘வாழை’ ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் சாரை இன்று நேரில் வாழ்த்தினோம்.

விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் – அவர்களின் வலிகளையும் அனுபவங்களின் வாயிலாகத் திரைமொழியில் பேசுகின்ற மாரி சாரின் கலை மென்மேலும் சிறக்கட்டும்! என அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வாழை படத்தை பார்த்தபின் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு மாரி செல்வராஜ் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ONE LAST TIME" - வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

More in Cinema News

To Top