Connect with us

நீண்ட வருடத்திற்கு பின் கதாநாயகனாக களமிறங்கிய மோகன் – ஹரா படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

Cinema News

நீண்ட வருடத்திற்கு பின் கதாநாயகனாக களமிறங்கிய மோகன் – ஹரா படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

நீண்ட நெடு வருடங்களுக்கு பின் நடிகர் மோகன் கதாநாயகனாக நடித்துள்ள ஹரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் 90களில் கொடிகட்டி பறந்த ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவரது நடிப்பும் இவர் நடித்த படங்களின் கதைகளும் இவரது படங்களில் வரும் பாடல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் திடீரென சில பல காரணங்களால் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நடிகர் மோகன் நீண்ட வருடங்களுக்கு பின் மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கியுள்ளார்.

ஹரா என்ற படத்தின் மூலம் நடிகர் மோகன் கதையின் நாயகனாக களமிறங்கியுள்ளார் . இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்க மோகன் உடன் இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ஜூன் 7 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ இந்த ட்ரைலரை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  OTTயில் வெளியானது மாரி செல்வராஜின் வாழை திரைப்படம்..!!

More in Cinema News

To Top