Connect with us

“தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான சூப்பர் ஸ்டார் வில்லன் ரகுவரன் அவர்களின் பிறந்த தினம் இன்று!”

Cinema News

“தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான சூப்பர் ஸ்டார் வில்லன் ரகுவரன் அவர்களின் பிறந்த தினம் இன்று!”

ரகுவரன், 1958ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர். தென்னிந்திய மொழிகளில் அதிகம் நடித்த நடிகர். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். அதில் நடித்து புகழ்பெற்றவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என இந்த மொழிகளில் 150 படங்களில் நடித்தவர். தனது வில்லன் நடிப்பு மற்றும் குரலுக்காக தனி இடம் பிடித்தவர். இவர் கதாநாயகனாக நடித்த ஒரு தொடர் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

இவர் 1958ம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கொல்லங்கோட்டில் பிறந்தவர். இவர் ராதா கிருஷ்ண மேனன் மற்றும் சத்யவதி அம்மாவின் பேரன் ஆவார். இவரது பெற்றோர் வேலாயுதன் மற்றும் கஸ்தூரி ஆவர். இவர் கோயம்புத்தூர் அரசு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இளங்கலை படிப்பை விட்டுவிட்டு, நடிப்பை தேர்ந்தெடுத்தார். இவர் முதலில் மலையாள திரையுலகில் நுழைய முயற்சித்தார். அது லாபகரமானதல்ல மற்றும் அதற்கு பணம் செவாகும் என்று தெரிந்தது.

பின்னர் இவர் ஸ்வப்ன திங்கள்கள் என்ற கன்னட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தலைகாட்டினார். அந்தப்படத்தில் கன்னட மூத்த நடிகர் அம்பரீசுடன் நடித்தார். பின்னர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் சிறிய வேடங்களில் நடிக்க துவங்கினார். 1979 முதல் 1983ம் ஆண்டு வரை சென்னை கிங்ஸ் என்ற சென்னை நாடக குழுவின் அங்கமாக இருந்தார். அந்தக்குழுவில் இடம்பெற்றவர்தான் நடிகர் நாசர். ஏழாவது மனிதன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுதான் அப்போது அவர் நடித்த பெரிய கதாபாத்திரம்.

ஆனால் அதற்குப்பின் அவருக்கு கிடைத்தது வெற்றி முகம்தான். இவர் தெலுங்கு நடிகை ரோகினியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரிஷிவரன் என்ற மகனும் உள்ளார். இவர்கள் விவகாரத்து செய்து பிரிந்து வாழ்ந்தார்கள். ரகுவரனின் போதைப் பழக்கம் அவரது தொழிலுக்கு இடையூறாக அமைந்தது. அவரை மீண்டும் மீண்டும் மறுவாழ்வு மையங்களுக்கு அழைத்துச்சென்றது. பல்வேறு மாநில மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் அவரது சிறப்பான நடிப்புக்காக பெற்றுள்ளார். இவர் குணச்சித்திர வேடங்களில்தான் தமிழ் படங்களில் நடித்தார்.

இவர் மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த தந்தை கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. பாட்ஷாவில் மார்க் ஆன்டனியாக, முதல்வனில் முதலமைச்சராக என பல கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருப்பார். பின்னர் குணச்சித்தர கதாபாத்திரங்களில் கதாநாயகர்களுக்கு தந்தையாக நடித்திருப்பார். நிறைய இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவரது குரல் தனித்தன்மை மிக்க குரலாக இருக்கும். இவரது படத்தில் நடித்தால் அந்தப்படம் நன்றாக ஓடும் என்பதால் ஒரு அதிர்ஷ்ட நடிகராகவும் இருந்தார்.

See also  ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'புல்லட்' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

ரஜினிகாந்தின் பாபா படம் வெற்றி பெறாததால், இவர் நடிக்காததால் தான் அந்தப்படம் ஓடவில்லை என எண்ணிய ரஜினிகாந்த், சிவாஜி படத்தில் இவருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்தப்படம் ரஜினிக்கு வெற்றிப்படமாக அமைந்தது. ரகுவரன் 2008ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி மாரடைப்பால் இறந்தார். இவரது அதிகப்படியான மதுப்பழக்கத்தால், இவர் நீண்ட நாட்களாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். பின்னர் உறக்கத்திலே இறந்துவிட்டார். இவரது மரணம் தென்னிந்திய திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top