Connect with us

“கோலிவுட்டின் மிகவும் முக்கியமான டைரக்டரான லோகேஷ் கனகராஜின் மொத்த சொத்து பாதிப்பு இவ்வளவா?!”

Cinema News

“கோலிவுட்டின் மிகவும் முக்கியமான டைரக்டரான லோகேஷ் கனகராஜின் மொத்த சொத்து பாதிப்பு இவ்வளவா?!”

LEO திரைப்படத்தை முடித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச் அல்லது ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பமாகும் என லோகேஷே தெரிவித்திருக்கிறார். LEO படத்தில் சந்தித்த விமர்சனங்களை கண்டிப்பாக தலைவர் 171ல் சரி செய்வார் என்று நம்பப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று அவரது மேக்கிங்கும் திரைக்கதையும்.

தான் திறமை வாய்ந்த கலைஞர் என்பதை தன்னுடைய முதல் படமான மாநகரத்திலேயே தன்னுடைய மேக்கிங் மூலம் நிரூபித்திருப்பார். அடுத்ததாக கமல் ஹாசனை வைத்து இயக்கியிருந்த விக்ரம் படத்தில் எல்சியூவை உருவாக்கி திரைக்கதையில் மேஜிக் நிகழ்த்தியிருப்பார். லோகேஷ் கனகராஜின் பலமாக பார்க்கப்பட்ட எல்சியூவே லியோவில் அவருக்கு சூட்டை கொடுத்திருக்கிறது. கைதி பட கான்ஸ்டபிள் நெப்போலியன் வந்ததோ இல்லை படத்தின் க்ளைமேக்ஸில் விக்ரம் கமல் ஹாசன் பேசுவது போன்ற காட்சியோ ரசிகர்களை ஈர்க்கவில்லை.

குறிப்பாக லியோ திரைப்படத்தை எல்சியூவுக்குள் கொண்டுவந்தே ஆக வேண்டும் என்ற முடிவில் அவர் இருந்தாரோ என்ற சந்தேகத்தையும் கிளப்பிவருகின்றனர் ரசிகர்கள். இப்படி சில விமர்சனங்களை சந்தித்தாலும் லோகேஷுக்கான டிமாண்ட் குறையவில்லை. தமிழ் சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் இப்போது லோகேஷ் கனகராஜ்தான் டாப் என்ற ஒரு பேச்சும் கோலிவுட்டில் கடந்த சில மாதங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 5 படங்கள் மட்டுமே இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்த சொத்து மட்டுமே 40 கோடி ரூபாய்வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அடுத்து ரஜினியை வைத்து இயக்கப்போகும் படத்துக்கு 40 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்க அவர் முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கு சன் பிக்சர்ஸ் ஒத்துக்கொண்டது என்று ஒரு தகவல் ஓடியதும் நினைவுகூரத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  100 கிளப்பில் இருந்தது Natural Star நானியின் சரிபோதா சனிவாரம்..!!

More in Cinema News

To Top