Connect with us

தோல்விக்கு கிடைத்த பரிசு : மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ₹24 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ..!!!

Featured

தோல்விக்கு கிடைத்த பரிசு : மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ₹24 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ..!!!

IPL கிரிக்கெட் தொடரில் என்று இரவு நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியிடம் மும்பை அணி தோல்வியடைந்த தற்போது மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பிசிசிஐ ₹24 லட்சம் அபராதம் விதித்துள்ளது மும்பை அணிக்கு விழுந்த சவுக்கடியாக பார்க்கப்படுகிறது.

லக்னோவில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 48 ஆவது போட்டியில் LSG – MI அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக கடுமையான இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது .

ஆனால் லக்னோ அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிற்சிகொடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 144 ரன்கள் குவித்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடியது

இலக்கை கடந்து போட்டியை விரைவில் முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ராகுல் மற்றும் குல்கர்னி களமிறங்கினர்.

இதில் முதல் ஓவரை சந்தித்த குல்கர்னி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாக பொறுப்புடன் ஆடி வந்த ராகுலும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஸ்டோனிஸ் அதிரடியில் மிரட்ட அணிக்கு தேவையான ரன்கள் மளமளவென வந்தது. தீபக் ஹூடாவுடன் சென்ற்து தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஸ்டோனிஸ் அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து இறுதி ஓவர் வரை சென்ற இந்த பரபரப்பான நிலையில் ஒரு வழியாக லக்னோ அணி 145 ரன்கள் எடுத்து வெற்றியை ருசித்தது.

இந்நிலையில் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்துள்ள மும்பை அணி வெறுப்பின் உச்சத்தில் இருந்த நிலையில் அந்த வெறுப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் மும்பை அணியின் கேப்டன் ஹ்ரிதிக் பாண்டியாவுக்கு பிசிசிஐ ₹24 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் ஹர்திக்கிற்கு பிசிசிஐ ₹24 லட்சம் அபராதம் விதித்துள்ளது .

நடப்பு ஐபிஎல் சீசனில் இது 2வது அபராதம். மேலும் ஒரு போட்டியில் மெதுவாக பந்து வீசினால், ₹30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

See also  சூர்யா நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் - விழா மேடையில் கோரிக்கை வைத்த போஸ் வெங்கட்,,!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top