Connect with us

பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய மும்பை – லக்னோ அணிக்கு 145 ரன்கள் இலக்கு..!!

Featured

பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய மும்பை – லக்னோ அணிக்கு 145 ரன்கள் இலக்கு..!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் அனல் பறக்க நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு விறுவிறுப்பாக நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணிக்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

லக்னோவில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் 48 ஆவது போட்டியில் LSG – MI அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக கடுமையான இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது .

அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ஹிட் மேன் ரோஹித் ஷர்மா களமிறங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இருவரும் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்து பரிதாபமாக வெளியேறினர்.

அடுத்ததாக வந்த சூரியகுமார் 10 ரன்னிலும் திலக் 7 ரன்னிலும் வெளியேற அடுத்து வந்த கேப்டன் ஹர்டிக் பாண்டியாவும் டக் அவுட்டாகி வெளியேற . மும்பை அணியின் நிலைமை ரொம்பவே மோசமாக இருந்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த வதேரா மற்றும் டேவிட் ஜோடி சேர்ந்து அகலபாதாளத்தில் கிடந்த அணியை போராடி உயரத்திற்கு கொண்டு வந்தனர் , சிறப்பாக விளையாடிய வதேரா 46 ரன்னிலும் டேவிட் 35 ரன்னிலும் வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 144 ரன்கள் குவித்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது லக்னோ அணி விளையாடி வருகிறது

இந்நிலையில் லக்னோவில் உள்ள பிரபலக கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூர்யா நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் - விழா மேடையில் கோரிக்கை வைத்த போஸ் வெங்கட்,,!!

More in Featured

To Top