Connect with us

“என் இதயமே நொறுங்கி விட்டது” உலககோப்பை தோல்வியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் சிராஜ்

CWC23

“என் இதயமே நொறுங்கி விட்டது” உலககோப்பை தோல்வியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் சிராஜ்

உலககோப்பை இறுதி போட்டியில் நாங்கள் சந்தித்த தோல்வியில் இருந்து எங்களால் இன்று வரை மீள முடியவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஏரளாமான ரசிகர்களுடன் கடந்த 19 ஆம் தேதி விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்றது.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று மந்தமாக ஆடியதால் 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது . இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அபாரமாக ஆடி 6 வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

இந்நிலையில் உலககோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்தது குறித்து உருக்கமாக பேசியுள்ள இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் கூறியதாவது :

உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி, நாங்கள் நினைத்ததைப்போல் முடியவில்லை. இந்தியாவிற்காக விளையாடியது பெருமையாக உள்ளது. தோல்வியால் ஏற்பட்ட ஏமாற்றத்தை வார்த்தைகளால் கூற முடியாது என் இதயம் சுக்குநூறாக உடைந்துள்ளது என முகமது சிராஜ் உருக்கமாக பேசியுள்ளார்.

இந்திய அணியின் இந்த தோல்வியை ஏற்கமுடியாமல் கடும் கோபத்தில் இருந்த ரசிகரக்ள் இந்திய அணியையும் ஆஸ்திரேலியா அணியையும் வசைபாடி வரும் நிலையில் இந்திய வீரர்களின் மனநிலையில் புரிந்துகொண்டு கருத்து கூறுங்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களுக்கு புத்திமதி கூறி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் விஜயகாந்திற்கு பிறகு விஜய்தான் - விஷால் அதிரடி..!!

More in CWC23

To Top