Connect with us

என் வாக்கு பலிக்கும்…2026-ல் அதிமுக ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி

Featured

என் வாக்கு பலிக்கும்…2026-ல் அதிமுக ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி

நான் ஜோசியர் தான் என் வாக்கு பலிக்கும் 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி அருகே நடைபெற்ற அதிமுக செயல்வீரர் வீராங்கனை கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி அங்கு உரையாற்றியதாவது :

அதிமுகவிடம் கூட்டணி பலமில்லை, பிரதமர் வேட்பாளர் முன்னிறுத்தவில்லை. இருப்பினும் அதிமுக 2019 நாடாளுமன்றத் தேர்தலை விட, 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்று அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணிகள் நடைபெறும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஊழல் செய்வதில் தமிழகம் தான் முதலிடம். திமுக தலைவர் ஸ்டாலின் நீங்கள் சொன்னபடி நான் சொல்லும் ஜோசியம் பழிக்கும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும்.

திமுக கார்ப்பரேட் கம்பெனி, அதில் திமுக தலைவர் ஸ்டாலின் சேர்மன், உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் இயக்குனராக உள்ளனர். கருணாநிதி மன்னராக இருந்தபோது அவரது மகன் ஸ்டாலினுக்கு முடி சூட்டப்பட்டது.

கருணாநிதி மறைவிற்குப் பிறகு முதல்வராக ஸ்டாலின் ஆகியுள்ளார். ஸ்டாலின் மன்னராக இருக்கும் நிலையில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இளவரசராக உள்ளார். அவருக்கு முடிசூட்ட முதல்வர் துடிக்கிறார். வாரிசு அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் இருக்கும். முதல்வர் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை, உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக ஆக்கியது மட்டுமே.

அதிமுக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்று பச்சை பொய்யை திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பேசி வருகிறார். அதிமுக சிறந்த ஆட்சியை செய்தது என்று மத்திய அரசிடம் இருந்துபெற்ற விருதுகளே சான்று.

அதிமுக ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட அற்புதமான திட்டம் தாலிக்கு தங்கம் திட்டம் ஏழை குடும்பத்தை சேர்ந்த நான்கு லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டது. ஏழை,எளிய அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவசமாக மடிக்கணினி திட்டம் உள்ளிட்டவைகள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மிரட்டலான காட்சிகளுடன் வெளியானது அமரன் படத்தின் ட்ரைலர்..!!

More in Featured

To Top