Connect with us

தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் மர்மக் காய்ச்சல் – போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

Featured

தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் மர்மக் காய்ச்சல் – போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் மர்மக் காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது :

தமிழகம் முழுவதும் கடும் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், கடுமையான உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளோடு பரவிக் கிடக்கும் மர்மக் காய்ச்சலை இன்றளவும் முறையாக பரிசோதிக்காமல், ‘மழைக்கால காய்ச்சல்’ என தட்டிக் கழித்து வருகின்றனர்.

கடந்த 1 மாதகாலமாக தொடர்ந்து வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக சுகாதாரத் துறைக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் மர்மக் காய்ச்சலுக்காக மக்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளை நோக்கி அணி வகுக்கிறார்கள் ஆகவே, போர்க்கால அடிப்படையில் சுகாதாரத்துறை செயல்பட வேண்டிய மிக உயரிய நேரமிது.

மக்களை பதட்டமைடைய செய்யாமல் காய்ச்சலை முறையாக பரிசோதித்து அவர்களின் நலனை காப்பது அரசின் கடமை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

மக்களை காப்பதற்காக தான் ஓட்டு போட்டு அரச நாற்காலியில் அமரவைத்துளள்னர் ஆகவே அவர்களுக்கு வேண்டியதை தேவையான நேரத்தில் கொடுப்பது அரசின் கடைமை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷின் ‘குபேரா’ படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!

More in Featured

To Top