Connect with us

இரு பெரும் OTT தளங்களில் நகுலின் வாஸ்கோடகாமா திரைப்படம்..!!

Cinema News

இரு பெரும் OTT தளங்களில் நகுலின் வாஸ்கோடகாமா திரைப்படம்..!!

நகுல் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான ‘வாஸ்கோடகாமா’ திரைப்படம் இரு பெரும் OTT தளங்களில் இன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் நகுல் . தமிழ் சினிமாவின் 90 களில் பிரபல முன்னை நடிகையாக வலம் வந்த நடிகர் தேவயானியின் அன்பு சகோதரரான இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் .

இதையடுத்து பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் நகுல் இன்று வரை பெரிய ஓப்பனிங்கிற்காக கடின உழைப்பை போட்டு வருகிறார்.

இந்நிலையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமே வாஸ்கோடகாமா . RGK இயக்கத்தில் உருவான இப்படத்தில் நகுலுடன் கே.எஸ்.ரவிக்குமார் , ஆர்த்தனா பிந்து , மன்சூர் அலிகான் , ஆனந்தராஜ் , முனீஸ்காந்த் , ரெடின் கிங்ஸ்லி , படவா கோபி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று இரு பெரும் OTT தளங்களில் வெளியாகி உள்ளது.

இத்திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  10 நாட்களில் GOAT படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top