Connect with us

‘நந்தன்’ திரைப்படத்திற்கு உயரிய சிறப்பு கலை விருது வழங்க வேண்டும் – இயக்குநர் கோபி நயினார்

Cinema News

‘நந்தன்’ திரைப்படத்திற்கு உயரிய சிறப்பு கலை விருது வழங்க வேண்டும் – இயக்குநர் கோபி நயினார்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘நந்தன்’ திரைப்படத்திற்கு உயரிய சிறப்பு கலை விருது வழங்க வேண்டும் என இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

சசிகுமார் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படமே நந்தன் . இப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘நந்தன்’ திரைப்படத்திற்கு உயரிய சிறப்பு கலை விருது வழங்க வேண்டும் என இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோபி நயினார் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

இந்தியாவில் இன்னும் விவாதத்திற்கு உட்பட்டிருக்கும் சனநாயக உரையாடலான, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரத்தை நேர்மையான திரை கதையின் வழியாக தன் சொந்த மக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறது “நந்தன்”

இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் நடித்தவர்கள் எல்லோருமே சமூகம் பொறுப்புள்ளவர்களாகவே இருந்தார்கள் என்பதுதான். குறிப்பாக இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி

.இன்னும் ஜாதி இருக்கிறதா என கேட்பவர்களுக்கு, என்னுடன் வாருங்கள் இந்தியாவில் ஜாதி இருக்கிறது என்று அழைத்துச் சென்று காட்டுகிறேன்…” என்ற வாசகத்துடன் துவங்குகிறது இத்திரைப்படம்

சனநாயகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட இயக்குநர் இரா. சரவணனின் தைரியத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

காலணிக்குள் இன்னும் அனுமதிக்கப்படாத நந்தன் எனும் தேரை, தன் முதுகில் சுமந்து வந்த இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரை, இன்னும் நாடு முழுவதும் கொடியேற்ற முடியாமல், நாற்காலியில் அமர முடியாமல், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நுழைய அனுமதிக்காத படி தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட எண்ணற்ற தலித் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் சார்பாக நெஞ்சுயர்த்தி நன்றியை சொல்லிக் கொள்கிறோம்

சனநாயக அறிவியல் கல்விக்கான திரைப்படம் என்பதால் இளம் தலைமுறையினருக்கும் மாணவ மாணவியருக்கும் போய் சேர வேண்டிய அவசியம் கருதி அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வழியாக நந்தன் திரைப்படத்தை காண வழிவகை செய்ய வேண்டும் என இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தலைவரின் வேட்டையன் திரைப்படம் எப்படி இருக்கு - ரசிகர்களின் ட்விட்டர் REVIEW இதோ..!!

More in Cinema News

To Top