Connect with us

மூக்குத்தி அம்மனாக மீண்டும் நயன்தாரா – இரண்டாம் பாகம் குறித்து டக்கர் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

மூக்குத்தி அம்மனாக மீண்டும் நயன்தாரா – இரண்டாம் பாகம் குறித்து டக்கர் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த சிறப்பான தரமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2020 ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படமே தான் மூக்குத்தி அம்மன் . ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்து அசத்தியிருப்பார்.

காமெடி கலந்த சாமி படமாக உருவான இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா அதிலும் நயன்தாரா தான் நடிக்க உள்ளாரா போன்ற பல கேள்விகள் இணையத்தில் உலா வந்த நிலையில் தற்போது அந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைத்துள்ளது.

பிரபல தரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது மூக்குத்தி அம்மன் 2 அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் மீண்டும் நயன்தாரா அம்மன் ரோலில் நடிப்பது உறுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை RJ பாலாஜி தான் இயக்க போகிறாரா இல்லையா என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை . மறுபக்கம் RJ பாலாஜி மிகவும் பிஸியாக பல படங்களில் வேலை செய்து வருவதால் இந்த படத்தில் அவர் இருக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  96 படத்தின் 2ம் பாகமா..? இயக்குநர் பிரேம் குமார் பகிர்ந்த தகவல்

More in Cinema News

To Top