Connect with us

தாய் மொழி படங்களில் நடிக்க மனமிறங்கி வந்த நயன்தாரா – வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

Cinema News

தாய் மொழி படங்களில் நடிக்க மனமிறங்கி வந்த நயன்தாரா – வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை நயனதாரா தனது தாய் மொழி சினிமாவான மலையாள சினிமாவுக்காக சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவரும் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் விக்னேஷ் சிவனும் நீண்ட நெடு நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து ஒரு பக்கம் குடும்பம் குழந்தைகள் மறுபக்கம் சினிமா , மற்றும் இதர தொழில்கள் என இருவரும் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பல மொழி படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வரும் நடிகை நயன்தாரா தற்போது தனது தாய் மொழி படங்களில் நடிக்க ஆசைகொண்டுள்ளாராம் இதுமட்டுமின்றி மலையாள சினிமாவுக்காக சிறப்பான சம்பவம் ஒன்றை நயன்தாரா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொதுவாக தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு 10 முதல் 12 கோடி வரை சம்பளமாக பெறும் நயன்தாரா ; மலையாள சினிமாவில் நடிப்பதற்கு தனது சம்பளத்தை வெகுவாக குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு மலையாள மொழி படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமல் நடிப்பில் உருவாகி உள்ள சார் படத்தின் `படிச்சிகிறோம்' பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top