Connect with us

தங்கலான் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல் – இதுவாது நடக்குமா..?

Cinema News

தங்கலான் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல் – இதுவாது நடக்குமா..?

சீயான் விக்ரமின் அசுரத்தனமான நடிப்பில் மிரட்டலாக உருவாகி உள்ள ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் குறித்த சிறப்பான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் கெட்டப் நாயகனாக வலம் வரும் சீயான் விக்ரமின் நடிப்பில் படு பயங்கரமாக தயாராகி உள்ள உள்ள படம் தங்கலான்.

தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குனர் என்று பெயரெடுத்த பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் சீயான் விக்ரமுடன் மாளவிகா மோகன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் கடந்த ஜனவரி மாதமே திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் இன்று வரை வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் எப்பதான் இந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் இப்படம் ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்தடுத்து எழுந்த குற்றச்சாட்டுகள் - உறுதுணையாக நின்ற நடிகர் சங்கத்திற்கு உருக்கமாக நன்றி சொன்ன நடிகர் தனுஷ்..!!

More in Cinema News

To Top