Connect with us

இந்தியன் 2 படத்திற்கு வந்த புது சிக்கல் – என்ன மேட்டர் தெரியுமா..?

Cinema News

இந்தியன் 2 படத்திற்கு வந்த புது சிக்கல் – என்ன மேட்டர் தெரியுமா..?

இந்தியன் 2 திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகி உள்ளது.

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் சுமார் 28 வருடங்களுக்கு பின் உருவாகி உள்ள திரைப்படம் இந்தியன் 2 பல இன்னல்களை கடந்து 6 வருடங்களாக போராடி தயாரான இப்படம் வரும் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது .

இப்படத்தில் மீண்டும் இந்தியன் தாத்தாவாக வரும் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டானது . இப்படத்தில் முதன்முறையாக ஷங்கருடன் இணைந்து அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகி உள்ளது. மதுரை ஹெச்.எம்.எஸ் காலனியில் உள்ள வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இந்தியன் 2 படத்திற்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் .

மனுவில் இந்தியன் முதலாம் பாகம் தயாரித்த போது கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசித்து அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டது. அதற்காக தனது பெயரும் படத்தில் இடம் பெற்றது. ஆனால் தற்போது, இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் முதலாம் பாகத்தின் பயன்படுத்திய வர்மகலை முத்திரையை 2 ஆம் பாகத்திலும் அனுமதி இன்றி பயன்படுத்தி உள்ளார். ஆகவே இந்தியன் 2 படத்தை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்கள் என எந்த வகையிலும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என ராஜேந்திரன் மனுவில் குறிப்பிட்டு உள்ளார் .

இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் சொன்ன தேதி படி இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top