Connect with us

வெளியானது கோட் படத்தின் ட்ரைலர் அப்டேட் – போஸ்டருடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

வெளியானது கோட் படத்தின் ட்ரைலர் அப்டேட் – போஸ்டருடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

விஜய்யின் மிரட்டலான நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் கோட் படத்தின் ட்ரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜயின் மிடுக்கான நடிப்பில் தற்போது வேற லெவலில் சிறப்பாக தரமாக உருவாகி வரும் திரைப்படமே THE GOAT .

AGS நிறுவனம் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் பல நாடுகளில் விறுவிறுவிப்பாக உருவாகி வரும் இப்படத்தை மாநாடு , மங்காத்தா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் .

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என அனைவரும் காத்திருக்கும் நேரத்தில் கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தின் ட்ரைலர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார் .

இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வெளியாகாமல் படத்தின் ட்ரைலர் அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘The GOAT’ படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாகும் என அட்டகாசமான போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோட் படத்தில் அப்பாவை பார்த்து நெகிழ்ந்த கேப்டனின் மகன்கள்..!!

More in Cinema News

To Top