Connect with us

திரையரங்கை மிரட்ட வரும் விடுதலை 2 – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

திரையரங்கை மிரட்ட வரும் விடுதலை 2 – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு..!!

சூரி மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் தரமாக உருவாகி உள்ள விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் படம் தான் விடுதலை.

சூரி மற்றும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .

இந்நிலையில் இப்படம் இருபாகங்களாக வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் விடுதலை 2 எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமாக நிரம்பி வழிந்தது .

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடிக்கும் ‘விடுதலை-2’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது .

இசைஞானி இளையராஜா இசையில் சிறப்பாக தரமாக உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் டிச.20ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'கடைசி உலகப் போர்' படத்தின் ட்ரெயிலர் வெளியானது..!!

More in Cinema News

To Top