Connect with us

அரசுப் பள்ளிக்கு 7.5 கோடி நிலத்தை தானமாக கொடுத்த மூதாட்டி – மதுரை அருகே நடந்த வியக்க வைக்கும் சம்பவம்..!!

Featured

அரசுப் பள்ளிக்கு 7.5 கோடி நிலத்தை தானமாக கொடுத்த மூதாட்டி – மதுரை அருகே நடந்த வியக்க வைக்கும் சம்பவம்..!!

மதுரை அருகே தனக்கு இருக்கும் 1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு தனமாக வழங்கியுள்ள ஆயி என்ற பூரணம் அம்மாளின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

சுமார் 7.5 கோடி விலைபோகும் நிலத்தை தானமாக வழங்கி சத்தமின்றி வங்கியில் வேலைபார்த்து வரும் இவரின் செயலை கண்டு திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் என பலரும் மனதார பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆயி என்ற பூரணம் அம்மாளின் செயலுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய “ஆயி என்ற பூரணம் அம்மாள்” அவர்களை வணங்குகிறேன்! போற்றுகிறேன்!

மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாள் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனி அவர்களின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாள் அவர்களின் தொண்டு மகத்தானது!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் அவர்கள் கௌரவிக்கப்பட உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேட்டையன் படத்தில் ராணாவின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

More in Featured

To Top