Connect with us

நாளை (08/12/2023) OTTயில் ரிலீசாகும் திரைப்படங்கள் List..!

Cinema News

நாளை (08/12/2023) OTTயில் ரிலீசாகும் திரைப்படங்கள் List..!

Jigarthada Double X

ராகவா லாரன்ஸ், SJ சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் வசூலை அள்ளிய நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது

Japan

நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் நவம்பர் 10ந் தேதி வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் மிகவும் மோசமான விமர்சனத்தை பெற்று வசூலில் அடிவாங்கியது. இத்திரைப்படம் வரும் 11ந் தேதி நெட்பிட்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

தீரன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரபாவதி ஆர்.வி. தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜீ5 ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

Raid

பல்வேறு வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்ததாக ‘ரெய்டு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 10 தீபாவளி ஸ்பெஷலாக வர இருக்கின்றது இப்படம் நல்ல ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் படம் நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்தநிலையில் ரெய்டு படம் டிசம்பர் 8 ஆம் தேதி ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான 'ரிவால்வர் ரீட்டா' பட டீசர் வெளியீடு..!!

More in Cinema News

To Top