Connect with us

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் – 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் மனு பாக்கர்..!!

Featured

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் – 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் மனு பாக்கர்..!!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக நடைபெறுகிறது.

விளையாட்டு வீரர்களின் கனவாக இருக்கும் இந்த ஒலிம்பிக் தொடரில் வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 பேர் என மொத்தம் 10,500 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர்

இதில் இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பங்கேற்றிருக்கின்றனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் களம் கண்டுள்ளனர் .

இந்நிலையில் இந்த ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இதேபோல் ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய வீரர் சரப்ஜோத் சிங் நூலிழையில் நழுவ விட்டுள்ளார்.

முதல் 8 இடங்களை பெறும் வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில், 8வது வீரரை விட ஒரே ஒரு புள்ளி பின்தங்கி இந்திய வீரர் சரப்ஜோத் சிங் 9வது இடம் பிடித்ததால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தீபாவளி பண்டியையை ஒட்டி நாளை ஒரே நாளில் 4 படங்கள் ரிலீஸ்..!!

More in Featured

To Top