Connect with us

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் : ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வெல்வாரா இந்தியாவின் நீரஜ் சோப்ரா..?

Featured

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் : ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வெல்வாரா இந்தியாவின் நீரஜ் சோப்ரா..?

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் இறுதி போட்டி இன்று இரவு நடைபெற உள்ள நிலையில் டோக்கியோ ஒலிம்பிகை போலவே பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது .

உலககெங்கும் இருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் கனவாக இருக்கும் இந்த ஒலிம்பிக் தொடரில் இம்முறை மொத்தம் 10,500 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர். உலகப்புகழ் பெற்ற இந்த தொடரில் இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர் .

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் ஆடவர் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் தங்க மகனான நீராஜ் சோப்ரா 89.34 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து நேரடியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இதையடுத்து ஈட்டி எறிதல் பிரிவின் இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது . தகுதிச்சுற்றில் 89.34 மீ. தூரம் வீசி அசத்திய நீராஜ் இறுதிச்சுற்றிலும் தனது முழுத்திறனையும் காட்டி தங்கப்பதக்கம் பதக்கம் வெல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .

ஏற்கனவே பல சாதனைகளை நிகழ்த்தி முன்னுதாரணமாக திகழும் நீராஜ் இன்று மேலும் ஒரு சாதனையை படைப்பாரா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அசத்தலான அம்சங்களுடன் வெளியானது புதிய Apple Airpods 4..!!

More in Featured

To Top