Connect with us

பிரதமர் மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – செல்வப்பெருந்தகை

Featured

பிரதமர் மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – செல்வப்பெருந்தகை

கடந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தியை பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. காந்தி படம் வெளியான பின்புதான் அப்படிப்பட்ட மனிதர் இருந்திருக்கிறார் என்று உலகத்தின் பலருக்கு தெரிந்திருப்பதாக பிரதமர் மோடி கூறியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பே 1909 ஆண்டு – ரஷ்யாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரான லியோ டால்ஸ்டாய், 1920 ஆண்டு – வியட்நாம் புரட்சியாளர் ஹோசிமின், 1931 ஆண்டு – அறிவியல் உலகின் அணையா விளக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 1931 ஆண்டு – ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர் சார்லி சாப்லின், 1940 ஆண்டு – நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவரும், தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவருமான நெல்சன் மண்டேலா, 1940 ஆண்டு – ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவரின் விடிவெள்ளியாக, நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்தவர் மார்ட்டின் லூதர் கிங்,1950 ஆண்டு – தி லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி வரலாற்று படைப்பை பதிந்த அமெரிக்க பத்திரிகையாளர் லூயிஸ் பிஷ்ஷர் மற்றும் இவர்களை போன்ற புகழ்பெற்ற ஏராளமானவர்கள் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டவர்கள்.

மோடி போன்ற காந்தியின் வரலாறு அறியாதவர்கள் அவரை குறித்து அவதூறு கருத்து சொல்வதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசத்தந்தையின் மாண்பை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசிய மோடி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Featured

To Top