Connect with us

சாலை விதிகளை மீறிய நடிகர் பிரசாந்த்க்கு – தயக்கமின்றி அபராதம் போட்ட காவல்துறை..!!

Cinema News

சாலை விதிகளை மீறிய நடிகர் பிரசாந்த்க்கு – தயக்கமின்றி அபராதம் போட்ட காவல்துறை..!!

நடிகர் பிரசாந்த் ப்ரோமோஷனுக்காக ஹெல்மெட் இன்றி பைக்கில் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்த நிலையில் தற்போது அவர் மீது போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரசாந்த் நீண்ட நெடு வருடங்களுக்கு பின் ஹீரோவாக நடித்துள்ள படமே அந்தகன் . தியாகராஜன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரசாந்த் உடன் பிரியா ஆனந்த் , சிம்ரன் , யோகிபாபு , சமுத்திரக்கனி , ஊர்வசி , கே.எஸ்.ரவிகுமார் , வனிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 9ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

அந்தவகையில் நடிகர் பிரசாந்த் பிரபல யூடுப் சேனலில் அந்தகன் படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்றுள்ளார் . அப்போது அந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி பிரசாந்துடன் சென்ற்து பைக்கில் சென்றுள்ளார் .

கலகலப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் இன்றி பைக் ஓட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி தற்பொழுது கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் போலீசார் நடிகர் பிரஷாந்திற்கு 2000 அபராதம் விதித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'கங்குவா' படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க பேசிய நடிகர் சூர்யா - என்ன சொன்னார் தெரியுமா..?

More in Cinema News

To Top