Connect with us

ஓடிடி ரிலீசுக்கு தயாரான பிரபாஸின் கல்கி 2898 AD – தேதியுடன் வெளியான டக்கர் தகவல்..!!

Cinema News

ஓடிடி ரிலீசுக்கு தயாரான பிரபாஸின் கல்கி 2898 AD – தேதியுடன் வெளியான டக்கர் தகவல்..!!

திரையரங்குகளில் 1000 கோடியை கடந்து வசூல் வேட்டை நடத்திய பிரபாஸின் கல்கி 2898 AD திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பிரபாஸ் நடிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படமே கல்கி 2898 AD . இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பட்டானி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வாழ்ந்துள்ளனர்.

பிரம்மிக்க வைக்கும் பொருட் செலவில் தமிழ் , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான இப்படம் முதல் நாள் முதல் நல்ல வரவேற்பை பெற்று 1000 கோடி வசூலை கடந்த சாதனை படமாக உருவெடுத்தது .

இந்நிலையில் இப்படம் எப்போது OTTயில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்காக தற்போது சிறப்பான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

எதிர் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி பிரபல OTT தளமான அமேசான் பிரைம் தளத்தில் கல்கி 2898 AD வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதுமட்டுமின்றி இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ONE LAST TIME" - வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

More in Cinema News

To Top