Connect with us

அடேங்கப்பா : வசூலில் புதிய உச்சத்தை தொட்ட பிரபாஸின் கல்கி 2898ஏடி – வெளியானது அதிகாரப்பூர்வ கலெக்ஷன் தகவல்..!!

Cinema News

அடேங்கப்பா : வசூலில் புதிய உச்சத்தை தொட்ட பிரபாஸின் கல்கி 2898ஏடி – வெளியானது அதிகாரப்பூர்வ கலெக்ஷன் தகவல்..!!

பிரபாஸ் உள்பட இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் கைகோர்த்து நடித்த கல்கி 2898 AD படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரம்மாண்ட நாயகன் பிரபாஸ் நடிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் மிக மிக பிரம்மாண்டமாக உருவாகி கடந்த மாத இறுதியில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கல்கி 2898 AD .

இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக கருதப்படும் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பட்டானி உள்பட பல முன்ணனி நடிகர்கள் இப்படத்தில் தங்களது முழு உழைப்பையும் கொடுத்து அசத்தியுள்ளார் .

தமிழ் , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி உள்ள இப்படத்தை தற்போது ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வரும் நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் வசூல் விவரத்தை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

அதன்படி, கல்கி திரைப்படம் உலகளவில் இதுவரை 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களின் மொத்த வசூலை கடந்து சாதனை படித்துள்ள இப்படம் வசூலில் இன்னும் முன்னேறி பல சாதனைகளை படைக்கும் என்றும் திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top