Connect with us

“பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தின் கதை இதுதானா?! இது அதுல..!”

Cinema News

“பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தின் கதை இதுதானா?! இது அதுல..!”

KGF படத்தின் தொடர்ச்சியாகவே சலார் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பல்பு கொடுக்கும் விதமாக இயக்குனர் பிரஷாந்த் நீலின் சமீபத்திய பேச்சு அமைந்திருப்பது பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது. KGF மற்றும் KGF 2 என யஷ்ஷை வைத்து பிரசாந்த் நீல் இயக்கிய இரு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி கன்னட திரையுலகத்தையே 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் படத்தை கொடுக்க முடியும் என சாதித்துக் காட்டி உள்ளார்.

அடுத்து பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள சலார் படத்துக்கும் KGF படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை பிரசாந்த் நீல் தெளிவுப்படுத்தி உள்ளார்.

ரசிகர்கள் பிரபாஸின் சலார் படமே யஷ்ஷின் KGF படத்தின் கதையோடு இணைந்த படம் தான் என்றும் கேமியோ ரோலில் யஷ் வருவார் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உள்ள நிலையில், அது படத்துக்கு பெரிய பலவீனமாக மாறிவிடும் என்பதை புரிந்துக் கொண்ட பிரசாந்த் நீல் தற்போது இரண்டு படத்திற்கும் சம்மந்தம் இல்லை எனக் கூறியுள்ளார்.

மேலும், சலார் படத்தில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருப்பார்கள் என்றும் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் யுத்தம் தான் இந்த படத்தின் கதை எனக் கூறியுள்ளார். இதை கேட்ட உடனே பல படங்கள் இதே போல வந்திருக்கே பாஸ் என ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் டிரெண்டாகி வருகின்றன.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம், சமீபத்தில் துல்கர் நடித்து வெளியான கிங் ஆஃப் கோதா உள்ளிட்ட பல படங்கள் இதே கதை தானே என கலாய்த்து மீம் போட்டு வருகின்றனர். கதை எப்படி இருந்தா என்ன பாஸ் மேக்கிங் மற்றும் திரைக்கதை தரமா இருந்தா நிச்சயம் இண்டஸ்ட்ரி ஹிட் தான் என பிரபாஸ் ரசிகர்கள் நெகட்டிவ் கருத்துக்களை ஒதுக்கி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விறுவிறுப்பாகும் ‘அமரன்’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!!

More in Cinema News

To Top