Connect with us

1000 கோடியை கடந்து வசூல் வேட்டை நடந்தும் பிரபாஸின் கல்கி 2898 AD – அதிகாரப்பூர்வ வசூல் விவரம் இதோ..!!

Cinema News

1000 கோடியை கடந்து வசூல் வேட்டை நடந்தும் பிரபாஸின் கல்கி 2898 AD – அதிகாரப்பூர்வ வசூல் விவரம் இதோ..!!

திரையரங்குகளில் இன்று வரை சத்தமின்றி வசூல் வேட்டை நடத்தி வரும் கல்கி 2898 AD படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

பிரபாஸ் நடிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் கடந்த மாத இறுதியில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கல்கி 2898 AD . இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பட்டானி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வாழ்ந்துள்ளனர்.

பிரம்மாண்ட பொருட் செலவில் தமிழ் , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியன் இப்படம் முதல் நாள் முதல் நல்ல வரவேற்பை பெற்று இன்று வரை வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இப்படம் தற்போது வரை எவ்ளோ வசூல் செய்துள்ளது உள்ளிட்ட விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது . அதன்படி இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாலியல் சீண்டல்களுக்கு ஆதாரம் தர முடியாது - நடிகை பிரியாமணி ஓபன் டாக்..!!

More in Cinema News

To Top