Connect with us

பாலிவுட்டை தூக்கி நிறுத்திய ஜவானின் வசூலை அசால்டாக ஓவர்டேக் செய்த பிரபாஸின் கல்கி..!!!

Cinema News

பாலிவுட்டை தூக்கி நிறுத்திய ஜவானின் வசூலை அசால்டாக ஓவர்டேக் செய்த பிரபாஸின் கல்கி..!!!

அட்லீ – ஷாருக்கான் காம்போவில் கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த ஜவான் படத்தின் சாதனையை பிரபாஸின் கல்கி திரைப்படம் அசால்டாக முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபாஸ் நடிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி கடந்த மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் கல்கி 2898 AD . அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பட்டானி என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் ஒன்று கூடி நடித்துள்ளது .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தமிழ் , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.

இந்நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் அட்லீ – ஷாருக்கான் காம்போவில் கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த ஜவான் படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜவான் படத்தின் முதல் வாரத்தின் இறுதி வசூலை தான் தற்போது கல்கி 2898 AD திரைப்படம் முறியடித்துள்ளது.

இப்படத்தின் முதல் வார இறுதி வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதில் கல்கி படம் உலகளவில் முதல் வாரத்தின் இறுதியில் ரூ. 555 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

ஷாருக்கானின் ஜவான் முதல் வாரத்தின் இறுதியில் ரூ. 517 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நல்ல பெயரெடுத்த வாழை திரைப்படம் - இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதி..!!

More in Cinema News

To Top