Connect with us

கொஞ்சம் முன்னாடியே வருகிறோம் – பிரசாந்த்தின் ‘அந்தகன்’ பட ரிலீஸ் தேதி மாற்றம்..!!

Cinema News

கொஞ்சம் முன்னாடியே வருகிறோம் – பிரசாந்த்தின் ‘அந்தகன்’ பட ரிலீஸ் தேதி மாற்றம்..!!

பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரசாந்த் நீண்ட நெடு வருடங்களுக்கு பின் ஹீரோவாக நடித்துள்ள படமே அந்தகன் . தியாகராஜன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரசாந்த் உடன் பிரியா ஆனந்த் , சிம்ரன் , யோகிபாபு , சமுத்திரக்கனி , ஊர்வசி , கே.எஸ்.ரவிகுமார் , வனிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது சில பல காரணங்களால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே திரைக்கு வர இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி பிரசாந்த்தின் அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமல் நடிப்பில் உருவாகி உள்ள சார் படத்தின் `படிச்சிகிறோம்' பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top