Connect with us

2026 தேர்தலில் விஜய்யால் வாக்குகள் சிதறலாம் – பிரேமலதா விஜயகாந்த்..!!

Featured

2026 தேர்தலில் விஜய்யால் வாக்குகள் சிதறலாம் – பிரேமலதா விஜயகாந்த்..!!

எதிர்வரும் 2026 தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியால் வாக்குகள் சிதறலாம் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது :

விஜய் நடித்த கோட் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எனவே படம் பார்த்துவிட்டு அது குறித்த கருத்தை நான் தெரிவிக்கிறேன். விஜய் கட்சியின் மாநாடு தாமதம் அடைவதற்கு காரணம் என்ன என்பது குறித்து விஜய் தான் பதில் அளிக்க வேண்டும்.

விஜய் கட்சியால் திராவிட கட்சிகளின் வாக்குகள் சிதறுகிறதா இல்லையா என்று 2026 தேர்தலில் தான் தெரியும்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருப்பது சிகிச்சைக்காகவா அல்லது முதலீடுகளை ஈர்க்கவா என்பதை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல் அவர் தமிழகம் திரும்பியவுடன் எத்தனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் எவ்வளவு முதலீடுகளை ஈர்த்துள்ளார் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமலின் ‘சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Featured

To Top