Connect with us

பிருத்விராஜ் நடிப்பில் சக்கை போடு போட்ட ‘தி கோட் லைஃப்’ படம் ஓடிடியில் வெளியாகிறது – எப்போது தெரியுமா..?

Cinema News

பிருத்விராஜ் நடிப்பில் சக்கை போடு போட்ட ‘தி கோட் லைஃப்’ படம் ஓடிடியில் வெளியாகிறது – எப்போது தெரியுமா..?

பிரித்விராஜ் நடிப்பில் திரையரங்குகளில் சக்கை போடு போட்ட ஆடு ஜீவிதம் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாள திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகராகவும் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநராகவும் வலம் வருபவர் பிரித்விராஜ். இவரது நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி வெளியான ஆடு ஜீவிதம் படம் குறித்து தரமான தகவலை தான் இந்த பதிவில் காணப்போகிறோம் .

பிளஸ்ஸி இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலா பால் இணைந்து நடிக்க இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் ஆடு ஜீவிதம் திரைப்படம் OTTயில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .

அதன்படி பிருத்விராஜ் நடிப்பில் திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்த ‘தி கோட் லைஃப்’ படம் ஜூலை 19ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மெட்ரோவுக்கு மத்திய அரசு கொடுத்த ரூ.21,000 கோடியில் ரூ.15,120 கோடி என்ன ஆனது?- ஹெச்.ராஜா

More in Cinema News

To Top