Connect with us

குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறிய PT Sir திரைப்படம் – இதுவரை செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறிய PT Sir திரைப்படம் – இதுவரை செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வரும் Pt Sir திரைப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் கலகலப்பான கதாநாயகனாகவும் கலக்கி வருபவர் ஹிப்ஹாப் ஆதி . இவரது இசையிலும் நடிப்பிலும் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் தற்போது உருவாகி உள்ள புதிய படம் தான் ‘PT சார்’ . கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் ஏக போக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், பாண்டியராஜன், இளவரசு,தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

இப்படம் கடந்த 24 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படம் உலகளவில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன .

படத்திற்கு படம் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி நல்ல படங்களை கொடுத்து வரும் ஹிப் ஹாப் ஆதியின் PT Sir திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் நிலையில் இவரது நடிப்பு மற்றும் இசையில் அடுத்ததாக வெளியாக இருக்கும் எப்படி வரப்போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஸ்வரூபம் எடுக்கும் அன்னபூர்ணா விவகாரம் - இதைவிட சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்? கருணாஸ் காட்டம்..!!

More in Cinema News

To Top