Connect with us

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி..!!

Featured

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி..!!

பஞ்சாப் மற்றும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது .

ரசிகர்களின் ஆரவாரத்துடன் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் அபாரமாக ஆடிய சென்னை அணி வெற்றியுடன் தொடரை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் இன்று சிறப்பான தரமான இரு போட்டிகள் நடைபெறுகிறது . இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

இந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி பேட்டிங் செய்தது.

ஆரம்பம் முதல் இறுதி வரை பொறுப்புடன் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் முதல் அதிரடி காட்ட தொடங்கியது .

சிறப்பாக விளையாடிய தவான் 22 ரன்களில் ஆட்டமிழக்க . அதே ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ்வும் ரன் அவுட் ஆனார் .

அவர்களைத் தொடர்ந்து களம் புகுந்த பிரப்சிம்ரன் சிங் – சாம் கரன் கூட்டணி நீதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் ,மெல்ல மெல்ல உயர்ந்தது ஒரு பக்க சாம் கரண் அதிரடியில் மிரட்ட மறுபக்கம் வந்த வீரர்கள் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

18-வது ஓவரில் லியாம் லிவிங்ஸ்டனும், சாம் கரனும் அடித்த சிக்சர்ஸ் பஞ்சாப் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் கொடுத்தது. ஆனால், அந்த உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

47 பந்துகளில் 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு பக்கபலமாக விளங்கிய சாம் கரன், கலீல் அகமது வீசிய பந்தில் போல்டானார். அடுத்த பந்தே ஷஷாங்க் சிங்கும் அவுட். 8 பந்துக்கு 8 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப்.

இறுதி நேரத்தில் பதற்றம் மைதானம் முழுவதும் தொற்றிக்கொண்ட நிலையில் சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார் லியாம் லிவிங்ஸ்டன். இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப் அணி

See also  DEFINITELY NOT : 2025 IPL-ல் தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top